8 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: முழு விவரம் இதோ..!

8 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: முழு விவரம் இதோ..!
நாடு முழுவதும் வங்கிகள் 8 நாட்கள் மூடப்பட்டிருக்கும்.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வங்கி விடுமுறை பட்டியலில், மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மே மாதத்தில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாராந்திர விடுமுறை நாட்கள் இதில் அடங்கும்.  ஆனாலும் சில விடுமுறைகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. வரும் நாட்களில் வங்கிகள் 8 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

வங்கி விடுமுறை பட்டியல்:
மே 9: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)
13 மே: ரமலான் ஈத் (ஈத்-உல்-பித்ர்). இந்த நாளில் பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் விடுமுறை.
மே 14: ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி / ரமலான் ஈத் (ஈத்-உல்-பித்ர்) / அக்ஷய திரிதியை பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர் இல் வங்கிகள் விடுமுறை.
மே 16: ஞாயிறு 
மே 22: நான்காவது சனிக்கிழமை 
மே 23: ஞாயிறு
மே 26: புத்த பூர்ணிமா. அகர்தலா, பெலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
மே 30: ஞாயிறு (அனைத்து இடங்களிலும்)

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்