சிங்கங்களையும் விட்டுவைக்காத கொரோனா: 8 சிங்கங்களுக்கு கொரோனா !

சிங்கங்களையும் விட்டுவைக்காத கொரோனா: 8 சிங்கங்களுக்கு கொரோனா !

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளுக்கு 3.50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்த சிங்கங்களுக்கு இருமல் உள்ளிட்ட கோவிட் அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனையின் முடிவில் அங்குள்ள 8 சிங்கங்களுக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது கொரோனோ பாதிப்புக்குளான சிங்கங்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அதன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விலங்குகளிருந்து மனிதர்களுக்கு கொரோனோ பரவும் என எவ்வித ஆதாரங்களும் இதுவரை ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்