தந்தை மீதான கோபத்தில் ஐந்து வயது மகளை கற்பழித்துக் கொலை செய்த நபர்.!

தந்தை மீதான கோபத்தில் ஐந்து வயது மகளை கற்பழித்துக் கொலை செய்த நபர்.!

தந்தை மீதான கோபத்தில் ஒரு இளைஞர் அவரது ஐந்து வயது மகளை கற்பழித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் சூரத்தின் ஹசிரா பகுதியில் ஒரு 5 வயது சிறுமியை முன்விரோதம் காரணமாக ஒரு இளைஞர் கற்பழித்துக் கொலை செய்துள்ளார்.  

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த சாகேத் என்ற தொழிலாளி, ஐந்து வயது சிறுமியை ஏப்ரல் 30 ஆம் தேதி தனது அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

சிறுமி கத்தியதால் ஆத்திரம் அடைந்த சாகேத்,  சிறுமியை ஒரு செங்கலால் தாக்கி, கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடலை அருகிலுள்ள புதர்களில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இதற்கிடையில் சிறுமி வீட்டிற்குத் திரும்பாததால், அவரது குடும்பத்தினர் சிறுமியைத் தேட ஆரம்பித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். 

விசாரணையின் போது, சிலர் சாகேத் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறினர்.இதையடுத்து, சாகேத்திடன் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையினர் 2019 ல் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையை மனதில் வைத்துக் கொண்டு, பழிவாங்குவதற்காக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கண்டறியப்பட்டது. 

அதைத் தொடர்ந்து சகேத்தை கைது செய்த போலீஸார் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.49%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.51%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்