மேற்கு வங்க முதல்வராக 3வது முறை பதவியேற்கும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வராக 3வது முறை பதவியேற்கும் மம்தா பானர்ஜி..!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக வரும் 5ஆம் தேதி பதவியேற்கிறார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது. பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சியாக அமர்கிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளார். ஆளுநர் தனகரை மம்தா பானர்ஜி இன்று சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது

மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3-வது முறையாக முதல்வராக வரும் 5-ஆம் தேதி மம்தா பானர்ஜி பதவி ஏற்க உள்ளார் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பர்தா சாட்டர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்