ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட கொரோனா நோயாளி: இறுதியாக மகள் கையால் தண்ணீர் குடித்து உயிரிழப்பு.

ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட கொரோனா நோயாளி: இறுதியாக மகள் கையால் தண்ணீர் குடித்து உயிரிழப்பு.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே வசிப்பவர் ஆசிரி நாயுடு. விஜயவாடாவில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு, பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்ற அவரை கொரோனா அச்சத்தால் கிராமத்தினர் ஊரிலிருந்து ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு குடிசையில் தங்குமாறு தெரிவித்துள்ளனர். இதனால், உரிய சிகிச்சை இல்லாமல் அவரின் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால் மூச்சு விட முடியாமல் திணறி துடித்துக் கொண்டிருந்தார். தந்தையின் துடிப்பை பார்க்க முடியாத மகள் தண்ணீரை தந்தையின் வாயில் ஊற்றிய சில நிமிடங்களிலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்