ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.5000 நிவாரணம்: டெல்லி முதல்வர்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.5000 நிவாரணம்: அதிரடியாக அறிவித்த டெல்லி முதல்வர்..!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முழு ஊடரங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், அனைத்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ .5000 வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.55%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.45%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்