மாப்பிள்ளைக்கு வாய்ப்பாடு தெரியல: திருமணத்துக்கு நோ சொல்ல மணமகள்..!

மாப்பிள்ளைக்கு வாய்ப்பாடு தெரியல: திருமணத்துக்கு நோ சொல்ல மணமகள்..!

இரண்டாம் வாய்ப்பாடு மணமகன் தவறாக சொல்லியதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மஹோபா எனும் இடத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (மே 1) இரவு தனது நண்பர்களுடன் மணமகன் திருமண மண்டபத்துக்கு வந்துள்ளார். இதேபோல் பெண் வீட்டாரும் திருமண மண்டபத்துக்கு வந்துள்ளனர். 

திருமண தம்பதியர் இருவரும் மாலை பரிமாறிக் கொண்டுள்ளனர். ஆனால் மணமகன் மீது கல்வித் தகுதி குறித்து சந்தேகம் எழுந்த மணமகள், இரண்டாம் வாய்ப்பாடு சொல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, அவர் தவறாக சொல்லியுள்ளார். 

இதையடுத்து, படிக்காத மணமகனை திருமணம் செய்து வைப்பதாக கூறி மணமகள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிவிட்டார். மணமகளின் உறவினர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 

மணமகன் பள்ளிக்கூடம் கூட சென்றிருக்க மாட்டார் போல தெரிகிறது. எங்களுடை பெண் துணிச்சலாக திருமணத்தை நிறுத்திவிட்டார் என மணமகள் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மணமகன் வீட்டில் இருந்து மணமகளுக்கு கொடுத்த பொருட்களையும், மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும் திருப்பி கொடுக்க வேண்டும் என கிராமத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்