தேசியம்
வாட்ஸ்அப்பில் வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பல்ல: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி.
வாட்ஸ்அப்பில் வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பல்ல: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி.
வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினர்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு குழுவின் அட்மின் பொறுப்பாக முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பையில் பெண்களுக்கு எதிராக வாட்ஸ்அப் குழுவில் தகவல்கள் பகிரப்பட்டதாக வழங்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அதன் அட்மின் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை வாட்ஸ்அப் குழுவை நிர்வகிப்பவர் அதில் பதிவிடப்படும் கருத்தை தணிக்கை செய்யும் நபரோ அல்லது கட்டுப்படுத்தும் நபரோ அல்ல என தெரிவித்துள்ளது. மேலும், "குழுவில் உள்ள மற்ற நபர்கள் செய்யும் தவறுக்கு அட்மினை மட்டும் பொறுப்பாக்க முடியாது. தவறான பதிவை குழுவில் பதிவிடும் நபர் தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.