ஐந்து நட்சத்திர ஹோட்டலை நாங்கள் கேட்டோமா.? : டெல்லி அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலை நாங்கள் கேட்டோமா.? : டெல்லி அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலை நாங்கள் கேட்டோமா.? : டெல்லி அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்.

நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 100 படுக்கைகளை உருவாக்கி டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 100 படுக்கைகளை உருவாக்கி டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தால் ஏராளமான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதனை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியது டெல்லி உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், "யாரைக் கேட்டு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தீர்கள். பொதுமக்கள் பலர் படுக்கை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் உங்களிடம் 100 படுக்கைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலை கேட்டோமா. உயர்நீதிமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளீர்களா.? என கூறினர். மேலும், இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து டெல்லி அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com