கொரோனாவால் உயிரிழந்த 22 பேர்…. ஒரே அம்புலன்ஸில் அடைக்கப்பட்ட சடலங்கள்..!
மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் 22 உடல்கள் ஒரே ஆம்புலன்சில் அடைக்கப்பட்டு மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் அவல நிலையை காண்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் கோரமுகம் தலைவிரித்தாடி வருகிறது. மிக முக்கியமாக மகராஷ்ட்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2000 மேல் பதிவாகி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பூங்காக்கள் மயானமாக மாற்றப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்ட்டிராவின் பீட் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 22 கொரோனா நோயாளிகளின் உடல்களை ஒரே ஆம்பூலன்சில் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து இறந்தவர்களின் உறவினர்கள் புகார் அளித்ததால், பீட் மாவட்டம் விசாரிக்க குழு அமைத்துள்ளது. மேலும் இந்த அவலத்தை புகைப்படம், வீடியோ எடுத்தவர்களை காவல் துறையினர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.