குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் உதவி கேட்ட பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்தியாவையிம் விட்டு வைக்கவில்லை. மத்திய அரசு, மாநில அரசு அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியான தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிக் கேட்டு டுவிட்டர் செல்போன் எண்ணைப் பகிர்ந்த பெண்ணுக்கு சில ஆண்கள் ஆபாச குறுஞ் செய்தி அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான தருணத்தில் உதவி கேட்கும்போது கூட இந்த மாதிரி இழிவான செயல் அருவருப்பை ஏற்படுத்துவதாக அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.