மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை
மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசும், அந்தந்த மாநில அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் ரயில்வே துறையில் பணியாற்றி வந்த அதுல் லால் என்ற நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்த அந்த நபர் மனைவியை கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போஸீஸார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.