அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் கொரோனா நோயாளி ஒருவர் வார்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் கொரோனா நோயாளி ஒருவர் வார்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வட மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் போதிய படுக்கைகள் இன்றியும், ஆக்சிஜன் வசதி இன்றியும் தவித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டில் இருந்து நோயாளியை அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் கூட இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை இருசக்கர வாகனத்தை எடுத்து வந்த இளைஞர்கள் மற்றொரு வார்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.