தேசியம்
எரிந்துகொண்டே இருக்கும் மயானங்கள்: தலைநகரை தலைகீழாக்கிய கொரோனா.
எரிந்துகொண்டே இருக்கும் மயானங்கள்: தலைநகரை தலைகீழாக்கிய கொரோனா.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதன் கோரத்தாண்டவம் மக்களை கலங்கடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 380 பேர் குறைவால் உயிரிழந்துள்ளனர். டெல்லி காசிப்பூரிலுள்ள தகன மேடையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை ஒரே நேரத்தில் எரியூட்டும் நிலை இருக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களை எரிக்க அவர்களது உறவினர்கள் டோக்கன் பெற்று பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. இதுகுறித்து தகன தளத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,"வைரஸ் எங்கள் நகர மக்களை ஒரு அரக்கனை போல விழுங்குகிறது" என்று தெரிவித்தார்.