உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் ஒருவர் மருத்துவரை தாக்கி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் ஒருவர் மருத்துவரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
அத்துடன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு முறையாக இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்களை திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் செவிலியரை தகாத வார்த்தையால் பேசியதால் கோபம் அடைந்த அவர் மருத்துவரை கன்னத்தில் அறைந்தார்.
இதனால் கோபமடைந்த மருத்துவர் அந்த பெண் செவிலியரை திருப்பி தாக்கினார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மருத்துவமனை ஊழியர்கள் சண்டையை விலக்கி விட்ட பின்னர் பெண் செவிலியர் மற்றும் மருத்துவரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்தாகவும் பணிசுமை அதிகமாக இருந்ததாகவும் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறேன் என்றார்.
இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளியின் இறப்பு சான்று தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர். பின்னர் அந்த செவிலியர் மருத்துவரிடம் சென்று கேட்டுள்ளார். உடனே விஷயத்தை எழுதி கொடு என கேட்டுள்ளார்.
அந்த செவிலியர் கோபத்தில் இருந்த போது உறவினர்கள் மீண்டும் வந்து அந்த சான்று குறித்து கேட்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த செவிலியர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.