வாகனத்தில் யாரும் ஏற்றவில்லை: மனைவியின் உடலை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கிச் சென்ற அவலம்

வாகனத்தில் யாரும் ஏற்றவில்லை: மனைவியின் உடலை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கிச் சென்ற அவலம்
வாகனத்தில் யாரும் ஏற்றவில்லை: மனைவியின் உடலை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கிச் சென்ற அவலம்

தன்னுடைய இறந்த மனைவியை யாரும் வாகனத்தில் ஏற்றதால் 3 கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கிச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது.

தன்னுடைய இறந்த மனைவியை யாரும் வாகனத்தில் ஏற்றதால் 3 கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கிச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கமரெடி பகுதியில் பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள ரயில் நிலையத்தில் தன்னுடைய மனைவியுடன் தங்கி வசித்து வந்துள்ளார். அவருடைய  மனைவி நாகலக்ஷ்மி உடல்நிலை சரியில்லாத காரணமாக இறந்து விட்டார். இதனையடுத்து அவர் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டார்.இதனை பார்த்த அங்கிருந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் ரூபாய் 2500 பணம் கொடுத்து செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

பின்னர் அவரது மனைவியின் உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்ல ஆட்டோ அல்லது தனியார் வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். பல மணி நேரமாகியும் யாரும் உடலை ஏற்றிச்செல்ல வரவில்லை. அவர் கொரோனோ காரணமாக இறந்துவிட்டார் என்று கருதி உடலை வாகனங்களில் ஏற்ற மறுத்துவிட்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய மனைவியை தோளில் சுமந்தபடி சுடுகாட்டிற்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தூக்கிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com