5 ஸ்டார் ஹோட்டல் நீதிபதிகளுக்காக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

5 ஸ்டார் ஹோட்டலில் 100 அறைகள் ஐகோர்ட் நீதிபதிகளுக்காக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்: டெல்லி அரசு அதிரடி..!
5 ஸ்டார் ஹோட்டல் நீதிபதிகளுக்காக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

டெல்லியில் நீதிபதிகள், நீதிமன்ற உயர் அதிகாரிகளுக்காக 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

டெல்லியில் நீதிபதிகள், நீதிமன்ற உயர் அதிகாரிகளுக்காக 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலுடன் ப்ரைமஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி சாணக்யாபுரி நீதிபதி கீதா குரோவர் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நீதிபதிகள், "நீதிமன்ற உயரதிகாரிகளுக்காக அசோகா நட்சத்திர ஹோட்டல் அறைகள் பயன்படுத்தப்படும் என்றார். 

ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை மருத்துவமனையே ஈடு செய்யும். இதற்கான மொத்த செலவையும் அங்கு தங்கும் நோயாளிகளிடம் பெற்று மருத்துவமனை நிர்வாகம் ஹோட்டல் நிர்வாகத்துக்கு வழங்கும்" எனவும் அவர் தெரிவித்தார். 

அதாவது, 5 நட்சத்திர ஹோட்டல்களில் 100 அறைகள் ஐகோர்ட் நீதிபதிகளுக்காக கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 20,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 380 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com