தேர்தல் முடிவுக்கு பின்னர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை.!

தேர்தல் முடிவுக்கு பின்னர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை.!
தேர்தல் முடிவுக்கு பின்னர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை.!

வரும் மே 2 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

வரும் மே 2 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை வரும் மே 2 ம் தேதி நடத்தப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் பிரசாரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் முறையாக கடைபிடிக்கப் படவில்லை என்பதாலே கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையமே முழு காரணம் என்று சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்தது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஓட்டு எண்ணி முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது பட்டாசு வெடிப்பதோ, கூட்டமாக கூடி கொண்டாடுவதோ கூடாது. தேவை இல்லாமல் யாரும் கூடக்கூடாது. வெற்றி பெறும் நபர்கள் சான்று பெற வரும் போது கூட்டமாக வரக்கூடாது. இருவர் மட்டுமே வரலாம். வெற்றி பெறும் நபர்கள் மக்களை சந்திப்பது கூடாது. தேர்தல் வெற்றி தொடர்பான கூட்டங்கள் ஏதும் நடத்தக்கூடாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com