கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மணமகன் பிபிஇ உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மணமகன் பிபிஇ உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.20 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மேலும் பரவு அச்சமும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா காலத்தில் திருமண நிகழ்வுகள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் ரட்லம் நகரை சேர்ந்த ஒரு ஜோடிக்கு நேற்று திருமணம் செய்ய ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் குறித்த முகூர்த்தத்தை கைவிட மனமில்லாத திருமண வீட்டார் கொரோனா தொற்றில் இருந்து பாதுகப்பாக இருக்க பயன்படுத்தப்படும் பிபிஇ உடை அணிந்து திருமணம் செய்துள்ளனர். பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்த தம்பதி அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர்.