தேசியம்
மனைவிக்கு கொரோனா தொற்று: மனைவியை கொன்று விட்டு கணவர் தற்கொலை
மனைவிக்கு கொரோனா தொற்று: மனைவியை கொன்று விட்டு கணவர் தற்கொலை
கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் அதுல் லால் என்ற நபர் தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவரை கொலை செய்துவிட்டு, மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை செய்தனர்.
அதில் அதுல் லால் ரயில்வே துறையிலும், அவரது மனைவி ஒரு தனியார் நிறுவனத்திலும் பணிப்புரிந்தது தெரியவந்தது. இதையடுத்து இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.