கணவனின் நடத்தை மீது சந்தேகம் இருந்ததால் தன்னுடைய கணவரை பழிவாங்குவதற்காக வீட்டில் கஞ்சா செடி வைத்து போலீசில் தகவல் தெரிவித்த மனைவி கைது செய்யபட்டார்.
கணவனின் நடத்தை மீது சந்தேகம் இருந்ததால் தன்னுடைய கணவரை பழிவாங்குவதற்காக வீட்டில் கஞ்சா செடி வைத்து போலீசில் தகவல் தெரிவித்த மனைவி கைது செய்யபட்டார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்னும் இடத்தில் வசித்து வரக்கூடிய தம்பதிகள் இருவருக்கு இடையே மனச்சங்டம் இருந்துள்ளது. தனது கணவரின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட பெண் அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் கஞ்சா செடி ஒன்றை நட்டுவைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் கணவர் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரித்த பொழுது அங்கிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண்மணி தான் வேண்டுமென்றே கஞ்சா செடியை வைத்து கணவரை பழி வாங்கி உள்ளார் என்ற விஷயமும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்த பொழுது கணவர் அடிக்கடி தாமதமாக வீடு திரும்பியதால் அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பழி வாங்குவதற்காக தான் இவ்வாறு செய்ததாக அவரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.