50% மக்களுக்கு கொரோனா… அச்சத்தில் ஒரு கிராமத்திற்கே சீல் வைத்த அதிகாரிகள்..!

கர்நாடகாவில் உள்ள பெல்காவி மாவட்டத்தில் இருக்கும் ஆபணாலி கிராமத்தில் இருக்கும் 50 சதவித மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் இருக்கும் ஆபணாலி என்ற கிராமத்தில் இருக்கும் 300 பேருக்கு கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது.  அதில் 144 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. 

அந்த கிராமத்தில் இருக்கும் பலரும் மகராஷ்ட்டிரா மாநிலத்தில் தினக் கூலிகளாக வேலைப் பார்த்து வந்துள்ளனர். அவர்கள் அண்மையில்தான் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் மூலமாகத்தான் கொரோனா நோய் தொற்று பரவியிருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் பாதிக்கு பாதி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் ஆபணாலி கிராமத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி சஷிகாந்த் முனியால் கூறுகையில், "முதல் கட்டமாக கிராம மக்களுக்கு ரேபிட் டெஸ்ட் சோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இப்போது அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் சோதனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com