ரப்பர் பந்தை விழுங்கிய துருவக்கரடிக்கு நேர்ந்த கொடுமை...நெகிழ்ச்சி சம்பவம்!

ரப்பர் பந்தை விழுங்கிய துருவக்கரடிக்கு நேர்ந்த கொடுமை...நெகிழ்ச்சி சம்பவம்!
ரப்பர் பந்தை விழுங்கிய துருவக்கரடிக்கு நேர்ந்த கொடுமை...நெகிழ்ச்சி சம்பவம்!

ரஷ்ய மிருகக்காட்சிசாலையில் ஒரு பார்வையாளர் வீசிய ரப்பர் பந்தை விழுங்கியதில், ஆண் துருவ கரடி ஒன்று இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய மிருகக்காட்சிசாலையில் ஒரு பார்வையாளர் வீசிய ரப்பர் பந்தை விழுங்கியதில், ஆண் துருவ கரடி ஒன்று இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரஷ்யாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் உம்கா என்ற 25 வயதான துருவகரடி உள்ளது.கடந்த திங்கள்கிழமை காலை யெகாடெரின்பர்க்கில் தன்னுடைய வளாகத்தில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென தரையில் சரிந்து விழுந்தது.கரடி விழுந்ததை கண்ட அவரது கவனிப்பாளர் உடனடியாக மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து பத்து நிமிடங்களுக்குள் ஒரு மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர், ஆனால் உம்கா
ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

துருவக்கரடியின் வயிற்றில் காணப்பட்ட ஒரு சிறிய ரப்பர் பந்து காரணமாகவே அது இறந்தது பிரேத பரிசோதனை செய்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. உம்காவின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள், ரப்பர் பந்து ஒரு
பார்வையாளரால் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.மேலும் இது மாதிரியான  சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com