பல மருத்துவர்களைப் போலவே நானும் கலங்குகிறேன், என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை என பெண் மருத்துவர் ஒருவர் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் துருப்தி கிலாடா சமூக ஊடங்களில், "பல மருத்துவர்களைப் போலவே நானும் கலங்குகிறேன். என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார். மேலும், "இன்னும் நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை அல்லது கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் சூப்பர் ஹீரோ கிடையாது. மேலும், உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக நினைக்க வேண்டாம். பல இளைஞர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் தினந்தோறும் பார்க்கிறோம். கொரோனா அனைத்து இடங்களிலும் இருக்கிறது வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் முதலில் பீதி அடைய வேண்டாம். மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவருடன் தொடர்பு கொள்ளுங்கள்" என கண்கலங்க கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.