ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் கொரோனா நோயாளிகளுக்காக, ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் ஆலை நிர்வாகம் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி தரலாம் என தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் கொரோனா அதிகரித்து ஆக்சிஜன் தேவை உயணர்த்துள்ளதால் அனுமதி தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.