மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2023 பேர் உயிரந்துள்ளனர்.
பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மகராஷ்டிரா மாநிலத்திலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதில் நாசிக்கில் உள்ள ஜாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில் நேற்று டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. டேங்கரில் இருந்த ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்ததனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக இருந்தது.
இந்த விபத்தில் முதலில் 22 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நாசிக்கில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 24 பேர் மரணமடைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.