வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கை தொழில் போட்டியை தடுப்பதாக உள்ளதா என்பது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு.
வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கை தொழில் போட்டியை தடுப்பதாக உள்ளதா என்பது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு.
தற்போது மக்களால் அதிக உபயோகம் செய்யப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றான 'வாட்ஸ் ஆப்' தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் பயனாளிகளின் தகவல்கள், தாய் நிறுவனமான பேஸ்புக் சமூக வலைதளத்துக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்கையை எதிர்த்து, பல வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், இந்த புதிய கொள்கை தொழில் போட்டியை தடுப்பதாக உள்ளதா என்பது குறித்து விசாரிக்க இந்திய தொழில் போட்டி கமிஷன் (சி.சி.ஐ) மார்ச், 24ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று ஒத்திவைப்பதாகவும், இம்மாதம், 13ம் தேதி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.