கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் மற்றும் தினமும் அரை லிட்டர் பால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என கவர்ச்சிகரமாக அறிவிப்புகள் வெளியியிடப்பட்டுள்ளன.
மே 10ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்தப்படும், உற்பத்தித் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவக்கப்படும் மற்றும் பெங்களூருக்கு மாநிலத் தலைநகர் மண்டலக் குறியீடு ஆகியவை முக்கிய வாக்குறுதிகளாக உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியின் தொலைநோக்கு ஆவணத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று பெங்களூருவில் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், கர்நாடகாவில் சீரான குடிமைச் சட்டத்தை (UCC) அமல்படுத்துவது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.உற்பத்தித் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேலும், கர்நாடகாவில் அடல் உணவகம் தொடங்கப்படும் எனவும், ஏழைக் குடும்பங்களுக்கு அரை லிட்டர் பால் மற்றும் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் எனவும், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின பெண்களுக்கான நிலையான வைப்புத் திட்டம், ஒவ்வொரு குடும்பத்திலும் பெண் தலைவருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 2,000 மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 3,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும்.வீடுகள் இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ10,000 வைப்புத்தொகை செலுத்திக் கூடுதலாக ரூ10,000 வழங்கப்படும். வயதானவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல் பரிசோதனை செய்யப்படும். பழமையான கோயில்களை புரனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.