இப்படியும் திருடுவாங்களா ? சுரங்கப்பாதை அமைத்து திருடிய திருடர்கள் !

இப்படியும் திருடுவாங்களா ? சுரங்கப்பாதை அமைத்து திருடிய திருடர்கள் !

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவரின் வீட்டில் திருடர்கள் வெள்ளியை திருடி உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம் குறித்து மருத்துவர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.அந்த புகாரில் தனது வீட்டின் மேற்பரப்பில் இருந்து 20 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட சுரங்கப்பாதை வழியாக 6 அடிக்கு கீழே மூன்று இரும்பு பெட்டிகளில் சேமிக்கப்பட்ட வெள்ளி திருடப்பட்டதாக மருத்துவர் ஒருவர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.இந்த வழக்கு பிப்ரவரி 23 ம் தேதி வைசாலி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த திருடர்கள் அந்த மருத்துவரின் வீட்டுக்கு பக்கத்தில் 90 லட்சம் மதிப்புள்ள ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி உள்ளனர் .அத்தோடு அவருடைய வீட்டு பக்கத்தில் சுரங்க பாதை அமைத்து நேரடியாக அவருடைய  வீட்டுக்கு பாதை அமைத்துள்ளார் .சுரங்கப்பாதை அமைத்து திருடி இருப்பது அக்கம் பக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வெள்ளி  கிட்டத்தட்ட 400 கிலோ இருக்கும் என்றும் கூறப்படுகிறது.மேலும் அந்த திருடர்களில் ஒருவர் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்