மூத்த மகளின் சிகிச்சைக்காக இளைய மகளை விற்ற பெற்றோர்!

மூத்த மகளின் சிகிச்சைக்காக இளைய மகளை விற்ற பெற்றோர்!

ஆந்திராவில் பெற்ற மகளை பெற்றோரே விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் 12 சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சமூக நல மேம்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமியை 46 வயதான சின்ன சுப்பையா என்பவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து சிறுமியை மீட்ட சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள், குழந்தை திருமணம் செய்ததாக சின்ன சுப்பையாவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  

சின்ன சுப்பையாவிடம் விசாரணை செய்ததில், 12 வயது சிறுமியின் பெற்றோருக்கு 16 வயதில் மற்றொரு மகள் உள்ளார் என்றும் இந்த மூத்த மகளுக்கு சுவாச நோய் சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியாமல் பெற்றோர் தவித்து வந்த போது சின்ன சுப்பையா உதவி செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளத்து. 

இந்நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் பேசி சின்ன சுப்பையா 12 வயது இளைய மகளை திருமணம் செய்து வைத்தால் ரூ.10 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர் அவர்களது இளைய மகளை பக்கத்து வீட்டில் வசித்துவரும் சின்ன சுப்பையாவிற்கு விருப்பமின்றி திருமணம் செய்து வைத்ததுள்ளனர். 

இதையடுத்து சின்ன சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடைபெற்று வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்