திரைப்பட பாணியில் திருட்டு ...திருடிய பைக்குகளை வைத்தே 2 ஏக்கர் நிலம் வாங்கி வீடு கட்டிய நபர் !

திரைப்பட பாணியில் திருட்டு ...திருடிய பைக்குகளை வைத்தே 2 ஏக்கர் நிலம் வாங்கி வீடு கட்டிய நபர் !

ஒரு சில குறிப்பிட்ட மாடல் பைக்குகளை  திருடி விற்று, 2 ஏக்கரில் நிலம் வாங்கி வீடு கட்டிய சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் சென்னை கோயம்பேட்டில் தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்க்கிறார். இவர் கடந்த 2020 டிசம்பரில் புதிதாக பைக் வாங்கி பூஜை போட்டு வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். திடீரென்று அவருடைய பைக்கை காலையில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி  கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதே மாதிரி  கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளில் நிறுத்தியிருந்த குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மட்டும் காணாமல் போவதாக தொடர் புகார்கள் வந்தன.போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, பைக்குகளை 2 பேர் திருடிச் செல்வது தெரிந்தது.அவரை பார்ப்பதற்கு பழைய குற்றவாளி ஒருவரை இருந்தது.மேலும் அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சின்ன பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த யுவராஜ் ஆவர் .போலீசார்  அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 25 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கோயம்பேடு வந்து குடியிருப்பு பகுதிகளிலும் சாலையோரமாகவும் நிறுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மாடல் பைக்கை மட்டும் திருடிச் சென்று வேலூரை  அடுத்த குடியாத்தம் பகுதிகளில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு திருட்டு பைக்குகளை வைத்தே  குடியாத்தம் பகுதிகளில் 2 ஏக்கரில் நிலம் வாங்கி, புதிதாக வீடு ஒன்றை யுவராஜ் கட்டி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.இது மாதிரியான சம்பவங்கள் திரைப்பட பாணியில் நடைபெறுவது போல இருக்கிறது .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்