இருதரப்பு பானிபூரி கடைக்காரர்கள் மாறி மாறி தாக்குதல்

இருதரப்பு பானிபூரி கடைக்காரர்கள் மாறி மாறி தாக்குதல்: உ.பி.,யில் பரபரப்பு..!

உத்தரபிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர்களை போட்டிப் போட்டு கொண்டு வரவேற்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர்  கொடூரமாக தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் என்ற இடத்தில் பானிப்பூரி கடைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அங்கிருந்த உருட்டுக் கட்டை, பைப்புகள், இரும்பு கம்பிகளால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஒரு தரப்பினர் துரத்தி துரத்தி மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் 8 பேரை கைது செய்தனர். 

பானிபூரி கடைக்காரர்கள் இடையே நடைபெற்ற மோதலின்போது, கடை வீதியில் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். தற்போது, கடைக்காரர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்