தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன. முதற்கட்டமாக நாடு முழுவதிலும் கொரோனா தடுப்புப் பணி மேற்கொள்ளும் மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாளை மறுநாள் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், என்டிடிவிக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார். 
அவர் பேசியதாவது, "தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதலில் 3000 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். பின்னர் படிப்படியாக மையங்களின் எண்ணிக்கை 5000ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
முதற்கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி நபர்களுக்கு செலுத்தப்படும்" என அவர் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்