மனைவியின் துயரத்தை துடைத்த கணவர்

மத்தியபிரதேசத்தில், சிரமத்துடன் தண்ணீர் சேகரித்த தனது மனைவிக்காக அவரது கணவர் வீட்டிலேயே கிணறு தோண்டி அசத்தியுள்ளார்.
தண்ணீர் தேவைக்காக கிணறுகளில் இருந்தும், தொலைதூர அடிகுழாய் கிணறுகளில் இருந்தும் சிரமத்துடன் பெண்கள் தண்ணீர் சேகரித்து வரும் அவல நிலையே இந்தியா முழுவதும் உள்ளது.
இந்த நிலையில், மத்தியபிரதேசத்தில் அவ்வாறு சிரமப்பட்டு தண்ணீர் சேகரித்து வந்த தனது மனைவிக்காக கணவர் வீட்டிலேயே சொந்தமாக கிணறு தோண்டி அசத்தியுள்ளார்.
மத்தியபிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள பான்புர் பவா சிற்றூரை சேர்ந்தவர் பரத்சிங் (வயது46). அவரது மனைவி வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் பம்ப் மூலம் தண்ணீர் சேகரித்து வந்துள்ளார். குடும்பத்தில் உள்ள 4 பேரின் அன்றாட தேவைக்காக தினந்தோறும் தண்ணீர் சேகரிக்க வேண்டியிருந்தது. ஒரு நாள் அந்த அடிகுழாய் கிணறு பழுதாகிவிட்டதால் தண்ணீரின்றி அவதியுற்றனர்.
கூலித்தொழிலாளியான பரத்சிங், தண்ணீருக்காக சிரமப்படுவதை தவிர்க்க, தனது வீட்டிலுள்ள காலியிடத்தில் சொந்தமாக கிணறு தோண்ட முடிவு செய்தார். அவரிடம் போதிய பணம் இல்லாததால், அவரே தினந்தோறும் சிறிது சிறிதாக கிணறு தோண்ட ஆரம்பித்தார். இப்படி 15 நாட்களிலேயே தனது சொந்த உழைப்பில் கிணறு தோண்டி முடித்தார். அதில் தண்ணீரும் ஊற்றெடுத்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணறு தோண்டுவோம் எனக் கூறியபோது ஆரம்பத்தில் மனைவி கேலி செய்து சிரித்ததாக பரத்சிங் கூறினார். தற்போது தங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியானது மட்டுமின்றி, வீட்டுக்கான காய்கறியை விளைவிக்கவும் தண்ணீர் கிடைத்துள்ளதாக பரத்சிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு