தனி ஒருவராக சிறுத்தையை சமாளித்த பெண்!

தனி ஒருவராக சிறுத்தையை சமாளித்த பெண்!

மேற்குவங்கத்தில் உள்ள டீ எஸ்டேட்டில் வேலை செய்த பெண் ஒருவர், தன்னை தாக்கிய சிறுத்தையிடம் தனி ஆளாக போராடி உயிர்பிழைத்துள்ள சம்பவம் பாராட்டப்பட்டு வருகிறது. 

மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பாத்ஹவா டீ எஸ்டேட்டில் வேலை செய்து வந்தவர் லீலா ஓரன். இவரை, அங்கிருந்த புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென தாக்கியிருக்கிறது. தன்னிடம் தடி, கம்பு எதுவும் இல்லாதபோதும், சிறுத்தையுடன் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அந்தப் போராடியுள்ளார். அந்தப்பெண் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிறுத்தையுடன் போராடி மீண்டுவந்துள்ளார்.  இதனையடுத்து அவர் எழுப்பிய கூச்சலைக் கேட்டு அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து, காயமடைந்த அந்தப்பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

லில்லாபாரி கிராமீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணின் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆபத்தான சூழல் எதுவும் இல்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சிறுத்தையிடம் தனி ஒருவராக போராடி உயிர் பிழைத்துள்ள அந்தப் பெண்ணின் தைரியமும், வீரமும் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்