கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை திறக்க அனுமதி

கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடிகளை திறக்கக் கோரி, ஜகத்ராம் சனானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளதால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிட வேண்டும். உரிய ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், கொரோனா பரவல் காரணமாக அங்கன்வாடிகளை திறப்பது என்பது தற்போது சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணை வந்தது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் திறக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அங்கன்வாடி மையங்களை திறப்பது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கலந்து ஆலோசித்த பின்பு இந்த முடிவை எடுக்க வேண்டும். குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு