திருமணத்துக்கு மறுப்பு: காதலனை கொலை செய்த இளம் பெண்

திருமணத்துக்கு மறுப்பு: காதலனை கொலை செய்த இளம் பெண்.. ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் 21 வயது பெண், தனது காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு கோதாவரி மாவட்டம் கோவூர் மண்டலத்தில் கபவரம் மற்றும் தர்மவரம் கிராமங்களுக்கு இடையே பரபரப்பான சாலையில் திங்கள்கிழமை மாலை (ஜன.11) இந்த கொடூரமான கொலை நடந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பவானி என்ற 21 வயது இளம் பெண், தாத்தாஜி என்ற 22 வயது இளைஞரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இளைஞரின் வீட்டின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய இளைஞர் முடிவு செய்துள்ளார். 

இந்த நிலையில், பவானியை திருமணம் செய்ய இளைஞர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.  அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 

இதையடுத்து பவானியை கைது செய்த போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்ணை திருமணம் மறுப்பு தெரிவித்தாலும் அவரிடம் பணம் கேட்டு இளைஞர் தொந்தரவு செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்