முதல் நாளிலேயே 50,000 பேருக்கு தடுப்பூசி: மகாராஷ்டிரா அரசு அதிரடி.

முதல் நாளிலேயே 50,000 பேருக்கு தடுப்பூசி: மகாராஷ்டிரா அரசு அதிரடி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் நாளிலேயே 50,000 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து வரும் 16-ம் தேதி முதல் செலுத்தப்படவுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடப்படும் நிகழ்வாக அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கொரோனா தடுப்பு மருந்துகளின் முதற்கட்ட டோஸ்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசிகள் செலுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் முதல்நாளில் சுமார் 50,000 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 511 மையங்களில் சுமார் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. அதில் மும்பையில் மட்டும் 72 தடுப்பூசி மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்