மகாராஷ்டிராவில் 80,000 கோழிகளை கொல்ல உத்தரவு

மகாராஷ்டிர மாநிலத்தின் பாரபானி மாவட்டத்தில் 80,000 கோழிகளை கொல்ல உத்தரவிட்டுள்ளது.
கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரத்தின் பாரபானி, பீட் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதியான நிலையில் லாத்தூர் மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரபானி மாவட்டத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் சனிக்கிழமை (ஜன.9) 900க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. தற்போது, அந்த மாவட்டத்தில் 80,000 கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், லாத்தூர் மாவட்டத்தின் கேந்திருவாடியில் 225 பறவைகள் இறந்தன. அதே நேரத்தில் சுக்னியில் 12 கோழிகளும், உத்கீர் தாலுகாவின் வஞ்சர்வாடியில் 4 கோழிகளும் இறந்துள்ளன.
கேந்திராவாடி மற்றும் சுக்னி பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.4% -
அனுபவக் குறைவு
24.39% -
கிரிக்கெட் அரசியல்
35.54% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.67%