நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம்: மத்திய அமைச்சர் உறுதி!

நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம்: மத்திய அமைச்சர் உறுதி!

நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராவ்சாகிப் படேல் தன்வே உறுதியளித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் இன்று(ஜன.12) செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராவ்சாகிப் படேல் தன்வே, ”ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை 2500 புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பேச உள்ளேன்” என்று பேட்டி அளித்துள்ளார்.

மேலும், “ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் அவர்கள் வாங்கும் தங்கத்தின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தங்க பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்” என்று மத்திய அமைச்சர்  உறுதி அளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்