இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளும் மீட்கப்படும்: சர்ச்சையை கிளப்பும் நேபாள பிரதமர்!

இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளும் மீட்கப்படும்: சர்ச்சையை கிளப்பும் நேபாள பிரதமர்!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்றும் அதனை தாங்கள் மீட்கவுள்ளதாகவும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைப்படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார்.

இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும்.

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் 14-ந் தேதி இந்தியா செல்கிறார். அப்போது அவர் 3 பகுதிகளையும் இணைத்து நேபாளம் வெளியிட்ட வரைப்படம் குறித்து ஆலோசனை நடத்துவார்.

இறையாண்மை சமத்துவத் தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் சில விவகாரங்களில் நியாயமான கவலைகளை இந்தியாவிடம் எழுப்ப நேபாளம் தயங்கக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்