வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: பிரதமர் மோடி உரை!

வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: பிரதமர் மோடி உரை!

வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற  பிரதமர் மோடி கூறினார்.

நாட்டில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதே, தேசிய இளைஞர் விழாவின் நோக்கம். நாட்டின் பல மாநில மொழி இன கலாச்சார பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் ஒரு மினி இந்தியா போன்றதொரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அவர்களுக்கான அரங்கை வழங்குவதன் மூலம், அங்கு இளைஞர்கள் கலந்துரையாடி அவர்களின் சமூக, கலாச்சார தனிச்சிறப்பை பரிமாறிக் கொள்ள முடியும். இது தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், தைரியம் மற்றும் சாகசத்தை வளர்க்கும். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கருத்தையும், உணர்வையும் பரப்புவதே இதன் அடிப்படை நோக்கம்.

அதில் பேசிய அவர், “ தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடந்த இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. இதன் மூலம், நமது அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டது. புதிய தேசத்தை கட்டமைக்கும் ஒரு முயற்சியாக புதிய கல்விக்கொள்கை உள்ளது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற, 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,”  தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடந்த இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. இதன் மூலம், நமது அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டது. புதிய தேசத்தை கட்டமைக்கும் ஒரு முயற்சியாக புதிய கல்விக்கொள்கை உள்ளது. 

முன்பு அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கெட்டுப்போவதாக குடும்பங்கள் நினைத்தன. ஆனால் இன்று, நாட்டு மக்கள் நேர்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்கின்றனர், நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் சூழலை நாங்கள் வழங்கி உள்ளோம்” என்றார்.

மேலும், “ஒவ்வொரு துறையையும் போலவே அரசியல், இளைஞர்களுக்கும் தேவை நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் ஒரு வாய்ப்பாக உள்ளது. நாட்டிற்கு சவாலாக இருக்கும் வாரிசு அரசியலானது, ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ளது. அதனை முற்றிலும் வேரறுக்க வேண்டும். 

வாரிசு அரசியல்வாதிகளுக்கு, தேசம் என்றும் முதன்மையாக இருந்தது இல்லை. ஆனால், வாரிசு அரசியல் என்ற நோய் இன்னும் முற்றிலும் அழியவில்லை. வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினரே முக்கியம். தங்கள் குடும்ப பெயரின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. திறமைக்கும், நேர்மைக்கும் தற்போது மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 

2047-ம் ஆண்டில் சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நோக்கி நாம் செல்லும்போது அடுத்த 25-26 ஆண்டுகள் மிக முக்கியமானவை. இது உங்கள் வாழ்க்கையின் பொற்காலம், நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்