மாட்டு சாணத்துக்கு மவுஸ்: சுற்றுச்சூழலுக்கு உகந்த பெயிண்ட் அறிமுகம்

இனி மாட்டு சாணத்துக்கு மவுஸ்: சுற்றுச்சூழலுக்கு உகந்த பெயிண்ட் அறிமுகம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட புதுமையான பெயிண்ட்டை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள புதுமையான வர்ணத்தை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று தனது இல்லத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த பெயிண்ட் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

"காதி இயற்கை வர்ணம்" என பெயரிடப்பட்டுள்ள பெயிண்ட் பூஞ்சைக்கும்,  நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் வர்ண தயாரிப்பாகும். மணமின்றி பசு சாணத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பூச்சுக்கலவை குறைந்த விலையில் இருப்பதுடன், இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது. காதி இயற்கை வர்ணம் 2 விதங்களில் கிடைக்கின்றன. இதன்படி, டிஸ்டம்பர் வர்ணம், நெகிழி எமல்ஷன் வர்ணம் ஆகும். காரீயம், பாதரசம், குரோமியம், ஆர்செனிக், காட்மியம் போன்ற உலோகங்கள் இல்லாத வகையில் இந்த வர்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சார்ந்த பொருட்களின் தயாரிப்பில் பசு சாணத்தை முக்கிய பொருளாகப் பயன்படுத்துவதை அதிகரிப்பதுடன், விவசாயிகள், கோ சாலைகளின் வருவாயையும் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகள்/ கோ சாலையின் ஒரு விலங்குக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கூடுதல் வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை தேசிய சோதனை மையம், டெல்லி ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி நிறுவனம், காசியாபாத் தேசிய சோதனை மையம்  ஆகிய மூன்று தேசிய ஆய்வகங்களில் காதி இயற்கை டிஸ்டம்பர் மற்றும் எமல்ஷன் வர்ணங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்