வேளாண் சட்டம்: பிரச்சனைகளை தீர்க்க குழு அமைத்த உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை; பிரச்சனைகளை தீர்க்க குழு அமைத்த உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களை எட்டியுள்ளது. விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டவில்லை.  

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. 

இந்த வழக்கு இன்று (ஜன.23) மீண்டும் தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்கிறோம். மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து முடிவெடுக்க 4 பேர் கொண்ட குழுவை நீதிபதிகள் நியமித்தனர். 

விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும். சுமூக தீர்வு காண விரும்புவோர் குழுவிடம் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு உறுப்பினர்கள் பெயரை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் ஹர்சிம்ரத் மான், வேளாண் பொருளியல் அறிஞர் அசோக் குலாட்டி, வேளாண் ஆராய்ச்சியாளர் பிரமோத் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்