சிவனுக்கு தனது தொண்டையை அறுத்துக் ரத்ததால் அபிஷேகம் செய்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவனுக்கு தனது தொண்டையை அறுத்துக் ரத்ததால் அபிஷேகம் செய்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பைதான் நகரில் உள்ள மகாதேவ் கோயிலில் 25 வயது நபர் தனது தொண்டையை அறுத்து, சிவலிங்கத்தின் மீது ரத்தம் ஊற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிஹாரி என்பவர் பிரார்த்தனை செய்ய கோயிலுக்குச் சென்ற போது அங்கு ஒருவர் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பின்னர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த நபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இறந்த அந்த நபர் நந்து குங்கசே என்பது கண்டறியப்பட்டது. அத்துடன் இவர் கங்காவாட் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் என்பதுடன் சம்பவம் நடந்த தினத்தில் இவர் செய்ததை சில பார்த்ததாகவும் தெரியவந்தது.
இதுதொடர்பாக நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர் ஆரம்பத்தில் நடந்ததை கூற தயங்கிய நபர், தொடர் விசாரணைக்கு பிறகு நந்து குங்கசே கோயிலில் தொண்டையை அறுத்து, சிவலிங்கத்தின் மீது இரத்தத்தை ஊற்றினார் என்றும் தங்கள் மீது கொலை பழி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் யாரும் அவரை தடுக்கவில்லை என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து மரணமடைந்த அந்த நபர் அகோரி முறையை தீவிரமாக பின்பற்றியவராக இருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.