ஒரே மேடையில் அரங்கேறிய தாய்-மகள் திருமணம்!

ஒரே மேடையில் அரங்கேறிய தாய்-மகள் திருமணம்!
ஒரே மேடையில் அரங்கேறிய தாய்-மகள் திருமணம்!

ஒரே மேடையில் அரங்கேறிய தாய்-மகள் திருமணம்!

உத்தர பிரதேச கோரக்பூரில் உள்ள பிப்ராலி தொகுதியில் ஒரே கல்யாண மண்டபத்தில் 53 வயதான ஒரு பெண்ணுக்கும் அவரது 27 வயது மகளுக்கும் திருமணம் நடைப்பெற்ற சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

கோரக்பூரில் உள்ள பிப்ராலி பகுதியில் கடந்த வியாழக்கிழமை முகமந்திரி சாமுஹிக் விவா யோஜனாவின் கீழ் 63 ஜோடிகளுக்கு திருமண நடைப்பெற்றது. அவ்விழாவில்,  பேலி தேவி(53) என்ற ஒரு விதவை பெண் தனது கணவரின் தம்பியை மணந்தார்.

இந்த பேலி தேவி ஏற்கனவே ஹரிஹர் என்பவரை மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர். அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தார். இப்போது, அவரது குழந்தைகள் அனைவருமே இளைய மகள் இந்துவைத் தவிர திருமணமாகி தங்கள் சொந்த குடும்பங்களுடன் குடியேறியுள்ளதால், பேலி தேவி தனது வாழ்நாள் முழுவதையும் தனது மைத்துனரான ஜெகதீஷுடன் (55), அதாவது தனது கணவரின் தம்பியுடன் கழிக்க முடிவு செய்தார்.

இந்நிலையில் பேலி மகள் இந்து(27) திருமணம் நடைப்பெற்ற பொது திருமண விழாவில், பேலி தேவி-ஜெகதீஷன் திருமணம் செய்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com