நடு ரோட்டில் பெண்களை சீண்டியவர்களுக்கு சரியான பாடம் கத்துக்கொடுத்த போலீஸ்…

நடு ரோட்டில் பெண்களை சீண்டியவர்களுக்கு சரியான பாடம் கத்துக்கொடுத்த போலீஸ்…

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகர் பகுதியில் உள்ள சில இளைஞர்கள் அங்கு சென்று வரும் பெண்களை தொடர்ந்து கேலி கிண்டல் செய்வதுடம், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதி பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர மிக அச்சம் அடைந்தனர். 

இந்நிலையில் அந்த இளைஞர்களின் செயல் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று வழக்கமாக அந்த இளைஞர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த போலீசார், பெண்களை சீண்டிய 2 இளைஞர்களை கைது செய்தனர். 

அத்துடன் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கும், மீண்டும் இந்த தவறை செய்ய கூடாது என்றும், அவர்களை சாலையின் நடுவில் தோப்புக் கரணம் போடச் செய்ததுடன்,அவர்களை நன்றாக கவனித்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான  வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்