பிக்பாஸ் பார்த்தபடியே மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்…

பிக்பாஸ் பார்த்தபடியே மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்…

ஆந்திராவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டே ஒருவர் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சாதனையை குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பாட்டிபண்டல கிராமத்தை சேர்ந்தவர் வரபிரசாத் என்பவருக்கு 5 ஆண்டுகளாக கடும் தலைவலி இருந்து வந்தது.

 இதனையடுத்து, கடந்த 2016-ல் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கட்டி அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் மீண்டும் மற்றொரு கட்டி வரத் தொடங்கியதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து வரபிரசாத்திற்கு உடனடியாக தங்களது சொந்த செலவிலேயே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரபிரசாத்திற்கு மூளையில் பேச்சுத்திறன் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . இதற்கு நோயாளி அறுவை சிகிச்சையின்போது விழித்திருப்பதும் அவசியமாகும். இதனால், அறுவை சிகிச்சையின் போது வரபிரசாத் தெலுங்கு பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியும், அவதார் படமும் பார்த்துள்ளார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சில நாட்கள் மருத்துவர்கள் தங்களது கண்காணிப்பில் வரபிரசாத்திற்கு சிகிச்சை அளித்து, நேற்று முன்தினம் அவரை டிஸ்சார்ஜ் செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்