மத்தியபிரதேசத்தில் 5 நகரங்களில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்..!

மத்தியபிரதேசத்தில் 5 நகரங்களில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்..!
மத்தியபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 1.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,138 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதையடுத்து, கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று அதிகரித்துள்ள நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, இந்தூர், போபால், குவாலியர், ரட்லாம் மற்றும் விதிஷா ஆகிய 5 நகரங்களில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்