சசிகலா விடுதலை.. சட்டப்படியே முடிவு.. சிறப்பு சலுகை கிடையாது..!

சசிகலா விடுதலை.. சட்டப்படியே முடிவு.. சிறப்பு சலுகை கிடையாது.. கர்நாடக அரசு..!

சசிகலா விடுதலை விவகாரத்தில் சட்டப்படியே முடிவு எடுக்கப்படுமென கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத் துறை நிர்வாகத்திடம், சசிகலாவின் வழக்குரைஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, 129 நாள்கள் சிறை விடுப்பு இருப்பதால், அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர்  பசவராஜ் பொம்மாய், "சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது. நீதிமன்ற தீர்ப்பின்படியும், சிறைச்சாலை விதியின் அடிப்படையிலும் சசிகலா விடுதலை செய்யப்படுவார். சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. சசிகலாவின் விடுதலை சட்டப்படியே முடிவு எடுக்கப்படும்" என கூறினார்.

கர்நாடக உள்துறை அமைச்சர் அளித்த தகவலின் அடிப்படையில், சசிகலா ஜனவரி மாதத்தில் விடுதலை செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்